முகப்பு
தேனி

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:29 AM
சிறை
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:02 PM

தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (50). இவரை, 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி தேனி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளங்கோவனைக் கைது செய்தனா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:27 AM

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கணேசன்

Advertisement

குற்றஞ்சாட்டப்பட்ட இளங்கோவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுக்கு நிவாரணமாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.