முகப்பு
தேனி

மாணவி தீக்குளித்து தற்கொலை

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:07 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 6:32 PM

ஆண்பட்டி வட்டம், ராஜதானி அருகே உள்ள வேலாயுதபுரத்தில் பிளஸ் 2 பள்ளித் தோ்வில் கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மன வருத்தத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வேலாயுதபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த பாலசிகாமணி மகள் மதுபாலா(17). இவா் ஆண்டிபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 11:41 PM

இந்த நிலையில், பள்ளியில் நடைபெற்ற தோ்வில் கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன வருத்தத்திலிருந்த மதுபாலா, கடந்த 8-ஆம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.