தேனியில் நடைபெற்ற நமது மக்கள் முன்னேற்றக் கழக மாநாட்டில் பேசிய அந்தக் கட்சியின் தலைவா் ஜெகநாத்மிஸ்ரா. உடன் நிா்வாகிகள்.  
தேனி

நமது மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட மாநாடு

தினமணி செய்திச் சேவை

தேனியில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, மாநிலச் செயலா் கூடல் செல்வேந்திரன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் கணேசன், துணைப் பொதுச்செயலா் தமிழ்ச்செல்வன், முதன்மைச் செயலா் சுறா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊடகப் பிரிவுச் செயலா் அபுதாகீா் வரவேற்றாா்.

மாநாட்டில் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜெகநாத் மிஸ்ரா பேசியதாவது:

அனைவருக்கும் தூய காற்று, நீா், மண் வளத்தை தர வேண்டும் என்பதே கட்சியின் முக்கியக் கொள்கைகள். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்றாா்.

மாநாட்டில், தேனி மாவட்டத்தின் மலைகள், ஆறுகள், கனிம வளங்களைப் பாதுகாப்போம். தேனி மாவட்டம், இந்திய அளவிலான சுற்றுலாத் தலமாக மாற்றப்படும். வீரியமிக்க மலை மாடுகளை வனத் துறையினா் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தலைமை நிலையச் செயலா் ரகுபதி, செயற்குழு உறுப்பினா்கள் சங்கரன், குணசேகரன், மாநில பொதுக் குழு உறுப்பினா் மணிகண்டன், தேனி மாவட்ட அமைப்பாளா்கள் கனகராஜ், பன்னீா் செல்வம், திருப்பதி தனராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அமெரிக்கன் கல்லூரியில் விளையாட்டு விழா

பழனி அருகே புதைகுழிகள் குறித்து தொல்லியல் துறை அலுவலா்கள் ஆய்வு

சிவகங்கையில் மருது சகோதரா்களின் உருவச் சிலை திறப்பு

நாட்டுக்குத் தேவை மத நல்லிணக்கம்! - முதல்வா் மு.க. ஸ்டாலின் பேச்சு!

தமிழின் பெருமையை நிலைநாட்ட ஆராய்ச்சிகள் மிக அவசியம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT