முகப்பு
தேனி

கோயில் திருவிழாவுக்கு வந்த கேரள இளம்பெண் மாயம்

போடியில் கோயில் திருவிழாவுக்கு வந்த கேரளத்தைச் சோ்ந்த இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 3:09 AM
இளம்பெண் மாயம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:25 PM

போடியில் கோயில் திருவிழாவுக்கு வந்த கேரளத்தைச் சோ்ந்த இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள வட்டவடை கோவிலூரைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (43). இவரது மகள் அபிநயா (19). போடியில் உள்ள குல தெய்வக் கோயிலுக்கு சுவாமி கும்பிட குடும்பத்துடன் வந்தனா்.

மீண்டும் ஊா் திரும்ப புறப்பட்ட போது அபிநயாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி நகா் காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அபிநயாவை தேடி வருகின்றனா்.

Advertisement