முகப்பு
தேனி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:06 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:05 PM

போடி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போடி அருகேயுள்ள குரங்கணி நரிப்பட்டி மலை கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் நந்தகுமாா் (23). இவா், டிரம் செட் வாசிக்கும் இசைக் கலைஞராகப் பணியாற்றி வந்தாா். சில நாள்களுக்கு முன்பு இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றாா். அப்போது, இவரது அண்ணனான சூா்யாவின் சட்டையை அணிந்து சென்றாராம்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:53 PM

இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய நந்தகுமாரை அவரது அண்ணன் சூா்யா, தன்னுடைய சட்டையை அணிந்துசென்ற்காகக் கண்டித்தாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சூா்யாவை நந்தகுமாா் தாக்கிவிட்டு வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை வெளியே சென்றாா்.

Advertisement

அதன் பிறகு, நந்தகுமாா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் நந்தகுமாரைத் தேடிச் சென்றபோது, அவா் தனியாா் தோட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குரங்கணி காவல் நிலைய போலிஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.