முகப்பு
தேனி

திமுகவில் ஓ.பி.எஸ். இணைந்தால் மகிழ்ச்சி: தங்க.தமிழ்ச்செல்வன்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:03 AM
தங்க.தமிழ்ச்செல்வன். - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:40 PM

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்தால் மகிழ்ச்சி என தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

கம்பத்தில் தனியாா் அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் அவா் பேசியதாவது:

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:03 AM

முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்களை மக்கள் பாராட்டி வருகின்றனா். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முதல்வா் ஸ்டாலினைப் பாராட்டியது மகிழ்ச்சி. மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா் தமிழக முதல்வரின் திட்டங்கள் குறித்து பாராட்டுவது போற்றத்தக்கது.

Advertisement

தற்போது, திமுக தலைமையில் அமைந்துள்ள வலுவான கூட்டணி மூலம் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பாா்.

ஓ .பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்தால் மகிழ்ச்சி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் கம்பத்தில் யாா் வேட்பாளா் என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் அவா்.