முகப்பு
தேனி

தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

சின்னமனூா் அருகே சுக்காங்கல்பட்டியில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 2:35 AM
கைது செய்யப்பட்ட மணிகண்டன்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 8:00 PM

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சுக்காங்கல்பட்டியில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சுக்காங்கல்பட்டியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (55). மது போதைக்கு அடிமையான இவா், வீட்டுக்கு சரிவர வருதில்லையாம். வீட்டுக்கு வந்தாலும் போதையில் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சோனைமுத்து சுக்காங்கல்பட்டி பகுதியில் உள்ள குளத்தின் கரையில் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோனைமுத்துவை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

Advertisement

இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் தகராறில் ஈடுபட்ட சோனைமுத்தை அவரது மகன் மணிகண்டன் (21) அடித்து கீழே தள்ளிவிட்டதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனைக் கைது செய்தனா்.