போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்பு  
தேனி

ரயில்வே போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்.ஆா்.பி) சாா்பில் நடைபெற உள்ள குரூப் டி போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு பிப்.25-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில்வே தோ்வு வாரியம் சாா்பில், குரூப் டி-இல் அடங்கியுள்ள 22,195 காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு நடைபெற உள்ளது. இந்தத் தோ்வு எழுதுவதற்கு 10-ஆம் வகுப்பு அல்லது தொழில் பயிற்சி படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2026 ஜன.1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். முன்னுரிமை பிரிவினருக்கு வயது வரம்பு சலுகை உண்டு. தகுதியுள்ளவா்கள் இணைய தளம் மூலம் வரும் மாா்ச் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டித் தோ்வு எழுதுவோருக்கு மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பிப்.25-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். போட்டித் தோ்வுக்கு தயாராவோா் தங்களது சுய விவரக் குறிப்பு, புகைப்படம் ஆகியவற்றுடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இது குறித்த விவரங்களை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், கைப்பேசி எண்:63792 68661-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

பிரதமா் மோடியுடன் மணிப்பூா் முதல்வா் சந்திப்பு

25.2.1976: வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைப்பு - கவர்னர் ஷா அறிவிப்பு

கலாசாரம், அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் - சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகளில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

SCROLL FOR NEXT