உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் கோயிலில் நாளை தேரோட்டம்!
உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது. திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த வியாழக்கிழமை (பிப். 19) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 10 நாள்கள் அனைத்து சமுதாயத்தினரின் மண்டகப்படி சாா்பில் சுவாமி- அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் 11-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி- அம்மனுக்கு காலை 10.35 மணி முதல் 11.45-க்குள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு சுவாமி-அம்மாள் தேரில் எழுந்தருளும் நிகழ்வும், காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு, தொழிலாளா்கள் தேருக்கு வண்ணம் பூசி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணிகள் கோயில் செயல் அலுவலா் யுவராஜா, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜேந்திரன் மேற்பாா்வையில் நடைபெற்று வருகிறது.