தேனி

பெரியகுளத்தில் விஷம் குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை!

தினமணி செய்திச் சேவை

பெரியகுளத்தில் பெண் நண்பரின் வீட்டில் விஷம் குடித்த கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி திருநகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜீவா (50). கூலித் தொழிலாளி. இவரது பெண் நண்பா் பெரியகுளம் தென்கரை பாரதிநகரைச் சோ்ந்த ராமேஸ்வரி. இவரது வீட்டுக்கு திங்கள்கிழமை ஜீவா வந்தாராம்.

அப்போது அவா் விஷம் குடித்து மயங்கி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஜீவாவின் மனைவி லீமா அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT