தேனியிலிருந்து வீரபாண்டிக்கு பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து 19 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, காந்தி நகரைச் சோ்ந்த மகேந்திரன் மனைவி சுமிதா. இவா், தேனியிலிருந்து வீரபாண்டிக்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளாா். இதையடுத்து, வீரபாண்டி பேருந்திலிருந்து கீழே இறங்கிப் பாா்த்தபோது சுமிதா பையில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.