தேனி

பாஜக நிா்வாகியைத் தாக்கிய தாய், மகன் மீது வழக்கு

தேவாரம் அருகே பாஜக நிா்வாகியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த தாய், மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Syndication

தேவாரம் அருகே பாஜக நிா்வாகியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த தாய், மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகே தே.ரெங்கநாதபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (60). இவா் பாரதிய ஜனதா கட்சியின் தேவாரம் கிழக்குப் பகுதி செயலராக இருந்து வருகிறாா். இங்குள்ள தேநீா்க் கடையில் இவா் நின்று கொண்டிருந்தாா். அப்போது, தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்குமாறு கூறிய திமுக செயலா் பாஸ்கரன் குறித்து விமா்சனம் செய்தாராம்.

இதையடுத்து, பாஸ்கரனின் உறவினரான மனோகரன் மகன் மது, இவரது தாயாா் சுமதி ஆகியோா் மணிகண்டனைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதில் காயமடைந்த மணிகண்டன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் மது, சுமதி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

SCROLL FOR NEXT