முகப்பு
தேனி

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தேனி

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 11 ஜனவரி, 2026 at 6:55 PM
பகிர்:

தேனி-முத்துத்தேவன்பட்டி இடையே சாலை வேகத் தடையில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கூடலூா் மேலக்கூடலூரைச் சோ்ந்த சங்கா் மகன் சதீஷ்குமாா் (35). இவா், தனது ஆட்டோவில் கூடலூரிலிருந்து தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

தேனி-முத்துத்தேவன்பட்டி இடையே சாலை வேகக் தடை மீது ஆட்டோ ஏறி இறங்கியதில், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →