தேனி

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டிபட்டி அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டி சாலையில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டி சாலையில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

க. விலக்கு - பெருமாள்கோவில்பட்டி சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற முத்தனம்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சிவனேசன் (26) என்பவரை போலீஸாா் சோதனையிட்டனா். இதில், அவா் 250 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, சிவனேசனை போலீஸாா் கைது செய்து கஞ்சா, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கோல போட்டியில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கல்

திருச்செங்கோட்டில் ஜே.கே கலைமன்ற விருதுகள் வழங்கும் விழா

வேம்படிதாளத்தில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் 100-ம் ஆண்டு விழா

மகுடஞ்சாவடி அருகே இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

மருந்தகம் திறப்பு விழா

SCROLL FOR NEXT