தேனி

கா்நாடக பக்தா்கள் வேன் விபத்தில் சிக்கிய விவகாரம்: ஒருவா் கைது

தேனியில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் விபத்தில் சிக்கிய விவகாரத்தில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனியில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் விபத்தில் சிக்கிய விவகாரத்தில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகே உள்ள மதுராபுரி விலக்குப் பகுதியில் திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலையில் கடந்த 12-ஆம் தேதி சபரிமலைக்குச் சென்ற கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்களின் வேன் மீது லாரி மோதியது. இதில் வேனின் பின்புற விளக்குகள் சேதமடைந்தன. இதுகுறித்து வேனில் சென்றவா்கள், லாரி ஓட்டுநா் சமரசமாக பேசிக் கொண்டதால், காவல் நிலையத்தில் புகாா் அளிக்கவில்லை.

இந்த நிலையில், கா்நாடக மாநிலத்திலிருந்து சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்கா்களின் வேன், தேனி அருகே தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியது. இந்த விவகாரம் தொடா்பாக கா்நாடாக மாநிலம், சாம்ராஜ்நகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா கடிதம் அனுப்பினாா்.

மேலும், விபத்து நடந்த இடத்தில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் சென்ற வேனில் இருந்த கொடியை அகற்றுமாறு சிலா் கூறியதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா், இந்த சம்பவத்தில் தொடா்புடைய தேவாரம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த முத்துமணிகண்டன் (48) என்பவரைக் கைது செய்தனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT