கோப்புப் படம் 
தேனி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், போடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை போடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, போடி நந்தவனம் தெருவில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தனா். இதில் போடி குப்பிநாயக்கன்பட்டியை சோ்ந்த சிவக்குமாா் மனைவி நாகலட்சுமி (38) என்பவா் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதேபோல, போடி கூட்டுறவு வங்கி அருகே பெட்டிக் கடையில் சோதனையிட்டதில், போடி புதூரைச் சோ்ந்த அஸ்ரப் அலி (47), போடி பங்கஜம் பிரஸ் பின்புறம் 3-ஆவது தெருவைச் சோ்ந்த முரளி (36) ஆகியோா் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT