தேவதானபட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.  
தேனி

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், தேவதானபட்டி மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் மாசி மகாத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது. மேலும், பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுத்தருளி வீதி உலா நடைபெறும். வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி மறுபள்ளயம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்தனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT