கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா முகூா்த்தக்கால் நடும் விழா
தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு தினமும் காலை, மாலையில் சிறப்பு வழிபாடுகளும், பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெறும். வருகிற 30- ஆம் தேதி சாட்டுதலும், கம்பம் நடுதலும், ஜூலை 6-ஆம் தேதி கொடியேற்றமும், ஜூலை 14-ஆம் தேதி மாவிளக்கு, ரத உற்சவமும், ஜூலை 15-ஆம் தேதி அக்னிச்சட்டி எடுத்தலும், ஜூலை 21-ஆம் தேதி மறுபூஜையும், பாலாபிஷேகமும் நடைபெறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.