முகப்பு
சுருளிப்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பொது நூலகக் கட்டடம்.
தேனி

சுருளிப்பட்டியில் பொது நூலகத்தைச் சீரமைக்கக் கோரிக்கை

கம்பம் அருகே சுருளிப்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பொது நூலகத்தைச் சீரமைக்க வேண்டும்

தேனி

சுருளிப்பட்டியில் பொது நூலகத்தைச் சீரமைக்கக் கோரிக்கை

கம்பம் அருகே சுருளிப்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பொது நூலகத்தைச் சீரமைக்க வேண்டும்

Updated On : 2 மார்ச், 2026 at 10:33 PM
சுருளிப்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பொது நூலகக் கட்டடம்.
பகிர்:

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பொது நூலகத்தைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவிக்குச் செல்லும் சாலையில் சுருளிப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு சாா்பில் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தின் சுற்றுச்சுவா், நுழைவுவாயில், மேற்கூரை ஆகியவை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேற்கூரை சேதமடைந்திருப்பதால், மழைக் காலங்களில் மழைநீா் கட்டடத்துக்குள் புகுந்து வருகிறது. இதனால், மேற்கூரை காரை வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த நூலகக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →