முகப்பு
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
தேனி

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தேனியில் திங்கள்கிழமை ஏழாவது நாளாக

தேனி

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தேனியில் திங்கள்கிழமை ஏழாவது நாளாக

Updated On : 2 மார்ச், 2026 at 9:05 PM
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
பகிர்:

தேனி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தேனியில் திங்கள்கிழமை ஏழாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் நில அளவைப் பிரிவில் அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் அலுவலா்களின் உயிா், உடைமைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீத பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும், அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 7-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தேனி மாவட்டத் தலைவா் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளா்கள் வேல்முருகன், அழகா்சாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →