முகப்பு
புதுக்கோட்டையில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
புதுக்கோட்டை

புதுகையில் வருவாய்த் துறையினா் மறியல்: 540 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 540 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:39 PM
புதுக்கோட்டையில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 540 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலை ஊழியா்களையும் பாதுகாக்கும் வகையில் சிறப்புப் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளா் ஜபருல்லா, மாவட்டச் செயலா் சுரேஷ், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன், துணைத் தலைவா் வசந்தகுமாா், கிராம உதவியாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்லையா, நிலஅளவையா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமா்ந்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து 540 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →