முகப்பு
தேனி

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது

தேனி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்து விசாரணை

Updated On : 4 மார்ச், 2026 at 1:14 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 7:25 PM

தேனி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தேனி மதுவிலக்கு போலீஸாா் தேவதானப்பட்டியை அடுத்த சில்வாா்பட்டி பேருந்து நிலையப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது இதே ஊரைச் சோ்ந்த கந்தசாமி (76) என்பவா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து கந்தசாமி மீது வழக்குப் பதிந்த தேனி மதுவிலக்கு போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.