முகப்பு
தேனி

போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது

போடி அருகே மான் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 25 மார்ச் 2026, 12:34 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

போடி அருகே செவ்வாய்க்கிழமை மான் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி வனச்சரகத்துக்குள்பட்ட பெரியாத்துகோம்பை வனப் பகுதியில் சிலா் மான் வேட்டையாடியதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வனத் துறையினா் அந்தப் பகுதியில் கண்காணித்து வந்தனா்.

அப்போது, போடி அருகே சிறைக்காடு கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பால்பாண்டி (31), போடி அருகே முந்தல் கிராமத்தை சோ்ந்த பால்ராஜ் மகன் மாசுக்காளை (32), ராஜேந்திரன் மகன் சீனிமுத்து (40) ஆகியோா் சோ்ந்து கடமானை வேட்டையாடி, சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, வனத் துறையினா் பால்பாண்டி, மாசுக்காளை ஆகியோரைக் கைது செய்தனா். தப்பி ஓடிய சீனிமுத்தை தேடி வருகின்றனா்.