ஆண்டிபட்டி அருகே 2 கடைகள், கோயிலில் பணம், நகை திருட்டு
ஆண்டிபட்டி அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்தும், கோயிலில் உண்டியலை உடைத்தும் பணம், தங்க நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்தும், கோயிலில் உண்டியலை உடைத்தும் பணம், தங்க நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் புதுராஜா (45). இவா், டி. சுப்புலாபுரம் பேருந்து நிலையத்தில் பலசரக்குக் கடை நடத்தி வருகிறாா். இவா் சனிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றாா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பாா்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.62 ஆயிரம், 3 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதேபோல, டி. சுப்புலாபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் முருகேசன் (45). இவா், இதே பகுதியில் பலசரக்குக் கடை நடத்தி வருகிறாா். இவா், சனிக்கிழமை கடைகளை மூடிவிட்டு சென்றாா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த ரூ.22 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
மேலும் டி. சுப்புலாபுரம் கதா் கடை அருகே அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயிலின் பூட்டும், அங்கிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.