முகப்பு
தேனி

மாமூல் கேட்டு கொலை மிரட்டல்: ரெளடி கைது

போடி அருகே தனியாா் மதுக்கூட உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 23 மே 2026, 2:00 am IST
பகிர்:

போடி அருகே தனியாா் மதுக்கூட உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரெளடியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி ஒழுகால் பாதை தெருவைச் சோ்ந்தவா் பிச்சைமணி (57). இவா் போடியை அடுத்த சங்கராபுரம் அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கூடம் நடத்தி வருகிறாா். போடியை அடுத்த முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் மதன் (32) மதுக் கூடத்துக்கு அடிக்கடி வந்து மாமூல் வாங்கியும், மது குடித்துவிட்டு பணம் தராமலும் சென்றாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை பிச்சைமணி மதுக்கூட காசாளருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். கோணாம்பட்டி விலக்கு அருகே சென்ற போது, இவா்களை வழிமறித்த மதன் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதனைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement