வத்திராயிருப்பில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப் படும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படு வருவதாக தமிழக செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர்வத்திராயிருப்பில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப் படும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படு வருவதாக தமிழக செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படு வருவதாக தமிழக செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் இரு நகர் பேருந்துகளை, இரு புதிய வழித்தடங்களில் இயக்கி வைத்து அமைச்சர் உரையாற்றுகையில் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சியில் சாலைகள், பாலங்கள், புதிய வழித்தடங்களில் பேருந்துகள் என்று கிராமத்தை நகரத்துடன் இணைத்து, கிராம மக்களும், நகர் மக்களுக்கு இணையாக அனைத்து வசதிகளையும் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வுருகிறார்.
யார் கோரிக்கை வைக்கிறார்கள் என்பது கிடையாது. கோரிக்கை நியாயமானாதா? என்பதுதான் முதல்வருக்கு. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவையின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன், சட்டப் பேரவையில் தமிழ்நாடு என்று முதல் முதலில் உச்சரித்து, பெயர் வைக்க வேண்டும் என்று விருதுநகர் சூலக்கரை மேட்டில் 72 நாள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த சங்கரலிங்கநாடாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முதல்வர் உடனே எழுந்து அதற்கான கோப்புகளை தயார் செய்யச் சொல்லி உத்தரவிட்டு, விருதுநகரில் மணிமண்டபத்திற்கு இடம் பார்க்க உத்தரவிட்டு, ரூ.49 லட்சம் அனுமதி வழங்கினார். இதுபோன்று யார் நியாயமான கோரிக்கை வைத்தாலும் கட்சி பாகுபாடி இன்றி முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் உள்ளது. ஆனால் இங்கிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து இல்லை என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்வர் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சென்னைக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்து தற்போது பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது என்றார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.
சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் தலைமை தாங்கினார்.
விருதுநகர் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் வரவேற்றார்.
வழித்தடம் 1-ல் ஸ்ரீவில்லிபுத்தூர்-கான்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர்-வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர்-பிளவக்கல் அணை, ராஜபாளையம்-பி.எஸ்.ஆர்.கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூர்-திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் வழி வன்னியம்பட்டி, மம்சாபுரம், நேர்வழி ஆகிய தனி நடைகளில் செல்லும்.
வழித்தடம் 2-ல் ஸ்ரீவில்லிபுத்தூர்-புத்தூர் வழி ராஜபாளையம், தளவாய்புரம், புனல்வேலி. ஸ்ரீவில்லிபுத்தூர்-கலிங்கப்பட்டி வழி பெருமாள்தேவன்பட்டி, அட்டைமில், வடகரை. ஸ்ரீவில்லிபுத்தூர்-கூமாப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர்-நத்தம்பட்டி வழி கிருஷ்ணன்கோவில். ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி ஆகிய தனி நடைகளில் செல்லும்.
விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அ.தி.மு.க. செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் சக்திகோதண்டம், வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக் குழு துணைத் தலைவர் அழகர்சாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் மல்லி எஸ்.ஆர்.துரைப்பாண்டியன், தொகுதி செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. வினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.