பிரிவினைக் குரல்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள்! பிகார் ஆளுநர்
கல்விச் சிந்தனை அரங்கில் பிகார் ஆளுநர் பேசியது பற்றி...
இந்தியாபிரிவினைக் குரல்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள்! பிகார் ஆளுநர்
கல்விச் சிந்தனை அரங்கில் பிகார் ஆளுநர் பேசியது பற்றி...
ஊடகங்கள் பிரிவினைக் குரல்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுப்பதாக பிகார் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாவது நாளில், பிகார் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:
"பிரிவினையை நம்பி வளரும் ஒருசில அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர். ஊடகங்கள் பிரிவினைக் குரல்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
நாட்டில் விவாகரத்து பெறாமலேயே பெண்களை அவர்களின் கணவர்கள் கைவிடுவதை தடுக்க சிஆர்பிசியில் மூன்று திருத்தங்கள் செய்யப்பட்டது. இதனால், 1973 ஆம் ஆண்டு அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் திருத்தத்தைக் கொண்டு வந்தது. ஆனால், இந்த திருத்தத்துக்கு பின்பும் அதையே வழக்கமாக கொண்டனர். திருத்தத்தை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை.
விவாகரத்து பெற்ற பெண்களின் பராமரிப்பு செலவை கணவர் ஏற்க வேண்டும். யாராவது பெற்றோரை விட்டுச் சென்றாலும் இது பொருந்தும். மனைவி உயிரிழந்த பிறகு மறுமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கும் இது பொருந்தும். ஆனால், மனைவியைக் கைவிடாமலேயே சிலர் வேறொருவரை திருமணம் செய்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.