முகப்பு
விருதுநகர்

உண்டு-உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கென  உண்டு, உறைவிடப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கென  உண்டு, உறைவிடப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமசுப்பு தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுடலைமணி ஆகியோர் இப்பள்ளியில் படிக்கும் 35 மாணவ மாணவியருக்கு தலா ரூ.1000 மதிப்பிலான எழுது பொருட்கள், கணித கருவிப் பெட்டி உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் மற்றும் போர்வை, வாளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முறையான பள்ளியில் சேர்த்து தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆசிரியப் பயிற்றுநர் முருகு திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →