முகப்பு
விருதுநகர்

மாந்தோப்பு சாலையை தரமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தரமில்லாமல் போடப்பட்ட மாந்தோப்பு சாலை, மூன்று மாதத்திலே யே பெயர்ந்த நிலையில், இதில் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.

Updated On : 12 ஏப்ரல், 2013 at 1:10 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

தரமில்லாமல் போடப்பட்ட மாந்தோப்பு சாலை, மூன்று மாதத்திலே யே பெயர்ந்த நிலையில், இதில் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.

   காரியாபட்டி தோணுகால் விலக்கிலிருந்து தண்டியனேந்தல், புளியம்பட்டி, பிசிண்டி, அச்சங்குளம், மாந்தோப்பு, அழகியநல்லூர் வழியாக, விருதுநகருக்கு 22 கி.மீ., சாலை உள்ளது. இப்பகுதி கிராம மக்கள், வணிகத்திற்காக விருதுநகருக்கும், அடிப்படை தேவைகளுக்காக காரியாபட்டிக்கும் வந்து செல்வதற்கும் இப்பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.

   இந்த சாலை படுமோசமாக குண்டும் குழியுமாக, வாகனங்கள் செல்லவே பயனற்று உள்ளது. பலமுறை புகார் கொடுத்தும், ஆங்காங்கே ஒட்டுபோடும் பணிகள் மட்டுமே நடந்தன. மிக குறுகிய நாள்களிலே சாலை மீண்டும் சேதமாகியது.

Advertisement

        சாலையை சீரமைக்க பல்வேறு போராட்டங்களை நடத்திய பின், மூன்று ஆண்டுகளுக்கு முன், தோணுகால் விலக்கிலிருந்து 5 கி.மீ., தூரமும், அழகியநல்லூர் விலக்கிலிருந்து 3 கி.மீ., தூரமும் சாலை அமைத்தனர்.

  அந்த சாலையும் தரமில்லாமல் போடப்பட்டதால், போட்ட மூன்று மாதத்திலேயே  குண்டும் குழியுமானது. அதற்குபின் ஒட்டுபோடும் பணிகள் கூட நடக்கவில்லை. தற்போது வாகனங்கள் செல்லவே முடியாத நிலை உள்ளது.

   இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இப்பகுதி மக்கள் நலன்கருதி, தரமான சாலை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.