முகப்பு
விருதுநகர்

கீழஅழகியநல்லூரில் உழவர் பெருவிழா

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள கீழஅழகியநல்லூரில் உழவர் பெருவிழா நடைபெற்றது

Updated On : 16 ஏப்ரல், 2013 at 12:16 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:48 PM

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள கீழஅழகியநல்லூரில் உழவர் பெருவிழா நடைபெற்றது.

   மாவட்ட துணை இயக்குனர்கள் கனகராஜ், விவேகானந்தன் தலைமையில் ஊராட்சி மன்றத்தலைவர் பிச்சையம்மாள் முன்னிலையில் உழவர் பெருவிழா துவங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி கலந்து கொண்டு உழவர் அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுபடி உழவர் பெருவிழா துவங்கப்பட்டு காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள 65 வருவாய் கிராமங்களில் தொடர்ந்து நடைபெறும்.

   வேளாண்மைதுறை, தோட்டகலைத்துறை, கால்நடை பராமரிப்புதுறை உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்ப உத்திகள், அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசி வருகின்றனர்.    விவசாயிகள் இலவசமாக மண் பரிசோதனை செய்வதுடன், விதைகள், மானிய விலையில் விவசாயப்பொருள்களையும் பெற்று கொள்ளலாம் என்றார். காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் சரஸ்வதி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் முத்துபாண்டி, மகளிரணி செயலாளர் இந்திராதேவி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் பழநிச்சாமி, கிளை செயலாளர்கள், ஊராட்சி மன்றத்துணை தலைவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.