முகப்பு
விருதுநகர்

லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம்

அருப்புக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் நாராயணசாமி வரவு- செலவு

Updated On : 13 ஆகஸ்ட், 2013 at 12:19 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:42 PM

அருப்புக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் நாராயணசாமி வரவு- செலவு கணக்கு தாக்கல் செய்தார். டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். லாரிகளுக்கு செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரிமிய தொகையை குறைக்க வேண்டும். உதிரி பாகங்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கந்தசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.