முகப்பு
விருதுநகர்

காரியாபட்டி பகுதியில் சுதந்திர தின விழா

: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணர் பகுதிகளில் இந்தியாவின் 67ஆவது சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டது.

Updated On : 17 ஆகஸ்ட், 2013 at 12:11 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:45 PM

: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணர் பகுதிகளில் இந்தியாவின் 67ஆவது சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டது.

காரியாபட்டி ஒன்றியம்: காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் ஆணையாளர் ராஜேந்திரன், அலுவலக மேலாளர் சங்கர நாராயணன் முன்னிலையில் ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

பேரூராட்சி: காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவர் பாரதாதேவி தலைமையில் செயல் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலையில் தலைவர் காந்தி மதிபழனி தேசியக் கொடியேற்றி வைத்தார்.

Advertisement

வட்டாட்சியர் அலுவலகம்:  காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முகம்மது ரபிக்கான் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். 

மல்லாங்கிணர்: மல்லாங்கிணர் பேரூராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவர் மணிராஜ் தலைமையில் செயல் அலுவலர் மாலா முன்னிலையில் தலைவர் நாகையா தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பேரூராட்சித் தலைவர் நாகையா பரிசு வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் ஏஞ்சல் ஹேமலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 செந்திக்குமார நாடார் பள்ளி: மல்லாங்கிணர் எம்.எஸ்.பி. செந்திக்குமார நாடார் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தேவசகாயம் தலைமையில் செயலர் செந்திக்குமார் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

 காவல் நிலையம்: மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அழகியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் பிச்சையம்மாள், வில்லிபத்திரி ஊராட்சி மன்றத்தில் தலைவர் ராஜேந்திரன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.