மல்லியில் 768 பயனாளிகளுக்கு வேஷ்டி-சேலை: ஒன்றியக் குழு தலைவர் வழங்கினார்
விருதுநகர்மல்லியில் 768 பயனாளிகளுக்கு வேஷ்டி-சேலை: ஒன்றியக் குழு தலைவர் வழங்கினார்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், மல்லி ஊராட்சியில் 768 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா வேஷ்டி-சேலைகளை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து வழங்கினார்.
இதற்கான விழா மல்லியில் ஊராட்சி மன்றத் தலைவர் கே.முத்தம்மாள் தலைமையில் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் சுந்தர் வரவேற்றார்.பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா வேஷ்டி-சேலைகளை வழங்கி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து பேசினார்.
நிகழ்சியில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்தாலம்மாள் ராமசாமி, அ.தி.மு.க நிர்வாகிகள் மல்லி குருவையா, சந்தனம், முத்து, ரவி, நடராஜன், ஜோசப், ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.