அருப்புக்கோட்டை, அம்பலம் ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (31). இவருக்கும் மதுரை செல்லூர் அழகர்சாமிக்கும் 2002இல் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்துக்கு வரதட்சிணையாக 50 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை கொடுத்தனராம். அழகர்சாமி தன் கடனை அடைக்க மனைவியின் 50 பவுன் நகையை வாங்கி அடகு வைத்துவிட்டு,
மேலும் 20 பவுன் நகை வாங்கி வரும்படி கொடுமைபடுத்தி, வீட்டை விட்டு விரட்டியதாக, லட்சுமி அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் அழகர்சாமியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.