விருதுநகர்

முதல்வர் பிறந்தநாள்: இலவச மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டு, அன்னதானமும் வழங்கப்படும் என காரியாபட்டி ஒன்றியச் செயலாளர் கரியனேந்தல் ராமமூர்த்தி கூறினார்.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டு, அன்னதானமும் வழங்கப்படும் என காரியாபட்டி ஒன்றியச் செயலாளர் கரியனேந்தல் ராமமூர்த்தி கூறினார்.

 23ஆம் தேதி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குழுவினரைக் கொண்டு காரியாபட்டி பேரூராட்சி திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அன்று காலை 10 மணியளவில் காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 65 இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. 

   24ஆம் தேதி கரியனேந்தல் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்படுகிறது. அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், தேவாலயம், பள்ளிவாசல்களில் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT