முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. ஒன்றியத்தில் ரூ.7 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை

தமிழக மக்களின் நலன் கருதி, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும்; தமிழகத்தின் உரிமைகள்

விருதுநகர்

ஸ்ரீவிலி. ஒன்றியத்தில் ரூ.7 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை

தமிழக மக்களின் நலன் கருதி, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும்; தமிழகத்தின் உரிமைகள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:33 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொத்தங்குளம் ஊராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

2012-13 ஒன்றிய பொது நிதியிலிருந்து கட்டப்படவுள்ள இந்த சமுதாயக் கூடத்திற்கான பூமி பூஜை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில், ராஜபாளையம் சட்டப் பேரவை உறுப்பினர் கோபால்சாமி முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து பேசுகையில் கூறியதாவது:

தமிழக மக்களின் நலன் கருதி, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும்; தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; இலங்கை வாழ் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோள்களுடன்  தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழர்களின் ஜீவாதார பிரச்னையான காவிரி நீரை தமிழகத்திற்குப் பெற்றுத் தர தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, உச்ச நீதிமன்றம் சென்று தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளார். இந்த வெற்றியை தமிழக மக்கள் வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் காட்டுவார்கள். தமிழகத்தின் நலன் காக்கும் வகையில் மத்தியில் புதிய விரைவில் அமையும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

விழாவில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்தாலம்மாள், கவுன்சிலர்கள் ராஜகோபால், மயில்ராவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், வெள்ளைச்சாமி, பொறியாளர் முத்துமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →