விருதுநகர்

காணாமல்போன மாணவர் மீட்பு

  காரியாபட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவரை திருப்பூரில் போலீஸார் மீட்டு விருதுநகர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவரை திருப்பூரில் போலீஸார் மீட்டு விருதுநகர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

 இதுபற்றி கூறப்படுவதாவது: மதுரை மாவட்டம் திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்த முத்து மகன் சரத்குமார். இவர் காரியாபட்டியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சென்ற தனது மகனை காணவில்லை என 5 ஆண்டுகளுக்கு முன்பு, முத்து காரியாபட்டி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

 இந்த நிலையில்  சில நாள்களுக்கு முன் சரத்குமார் திருப்பூரில் உள்ள   பேக்கரியில் வேலை பார்த்து வரும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து காரியாபட்டி போலீஸார் திருப்பூர் சென்று   சரத்குமாரை மீட்டு வந்து விருதுநகர் நீதிமன்றத்தில்  ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT