விருதுநகர்

வட்டாட்சியரை தரக்குறைவாக பேசிய வாலிபரிடம்ம் போலீஸ் விசாரணை

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாட்சியரைத் தரக்குறைவாகப் பேசிய வாலிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாட்சியரைத் தரக்குறைவாகப் பேசிய வாலிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   இது பற்றி கூறப்படுவதாவது: வெள்ளிக்கிழமை இரவு காரியாபட்டி வட்டாட்சியர் சுதந்திரமணிக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் தனது பெயர் நெப்போலியன் என்றும், மல்லாங்கிணர் நகர கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் என்றும் கூறியதோடு, பெண் என்றும் பாராமல் மிகவும் தரக்குறைவாக பேசினாராம். 

   வட்டாட்சியரின் கார் டிரைவர் மற்றும் பணியாளர்கள் மல்லாங்கிணர் வந்து அவரைத் தேடிய போது அவர் வீட்டில் இல்லை. மல்லாங்கிணர் மெயின் பஜாரில் நடந்து வந்து கொண்டிருந்த நெப்போலியனைப் பிடித்து அவர்கள் மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

   இது பற்றி, வட்டாட்சியர் புகாரின் பேரில் மல்லாங்கிணர் போலீஸார் நெப்போலியனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT