விருதுநகர்

மின்சார சிக்கன வார விழா

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அருப்புக்கோட்டை கோட்ட அளவிலான மின்சார சிக்கன வார விழா, காரியாபட்டி சேது என்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது

கல்யாணி வெங்கடராமன்

 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அருப்புக்கோட்டை கோட்ட அளவிலான மின்சார சிக்கன வார விழா, காரியாபட்டி சேது என்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.

   விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் வஜ்ரவேல் தலைமை தாங்கினார். அருப்புக்கோட்டை செயற்பொறியாளர் (பொறுப்பு) லதா வரவேற்றார்.

   இதில் மின்சார சிக்கனம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

   விழாவில் சேது என்ஜினியரிங் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், கல்லூரி கட்டுமான பொறியாளர் முனியசாமி, உதவி மின்பொறியாளர் பாலசுப்பிரமணியன், காரியாபட்டி உதவிப் பொறியாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT