விருதுநகர்

ரோசல்பட்டியில் விளையாட்டு விழா

விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி தங்கமணி காலனி  இளைஞரணியின் 5-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்களுக்கு கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

கல்யாணி வெங்கடராமன்

 விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி தங்கமணி காலனி  இளைஞரணியின் 5-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்களுக்கு கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

       வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைக்கும் போட்டி, சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி  புதன்கிழமை தங்கமணி காலனி கலையரங்கத்தில் நடைபெற்றது(படம்). வெற்றி பெற்றவர்களுக்கு வில்லிபத்திரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.டி. பாலகிருஷ்ணன் பரிசுகளை வழங்கிப் பேசினார்.

    முதியோர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை சதீஸ்சுந்தர் வழங்கினார். ரோசல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கமாரியப்பன், முன்னாள் வார்டு உறுப்பினர் முத்து, ரவிக்குமார், ஜஸ்டின் பிரபாகரன், கிருஷ்ணகுமார், கணேசன், திருப்பதி, ஜெய்சிங் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தங்கமணி காலனி இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT