விருதுநகர்

வரதட்சிணை கொடுமை: இருவர் கைது

காரியாபட்டி அருகே கூடுதல் வரதட்சிணை கேட்டு, பெண்ணை வீட்டை விட்டு விரட்டியதாக கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டி அருகே கூடுதல் வரதட்சிணை கேட்டு, பெண்ணை வீட்டை விட்டு விரட்டியதாக கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

   காரியாபட்டி அருகே தோணுகாலைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ராஜாமணி (வயது32). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்களாகி விட்டது. திருமணத்தின் போது 10 பவுன் நகை மற்றும் ரொக்கம் கொடுத்துள்ளனர்.     இந்நிலையில் மோகன்ராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால், அவரது மனைவி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இவரது கணவரும், மாமியாரும்  நகை மற்றும் பணம் வாங்கி வருமாறு கூறி ராஜாமணியைத் துன்புறுத்தியதுடன், வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. 

   இதுகுறித்து ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜ் மற்றும் அவரது தாயார் ஜெயபாக்கியம் ஆகியோரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT