ஸ்ரீவிலி. அருகே டி.ஒய்.எஃ.ஐ. சார்பில் ரத்ததான முகாம்
சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஐ.பொன்னையா தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் ஜி.தங்கராஜ் முன்னிலை வகித்தார். ஜி.கார்த்திக்ராஜா வரவேற்றார்.வாழ்நாள்
விருதுநகர்ஸ்ரீவிலி. அருகே டி.ஒய்.எஃ.ஐ. சார்பில் ரத்ததான முகாம்
சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஐ.பொன்னையா தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் ஜி.தங்கராஜ் முன்னிலை வகித்தார். ஜி.கார்த்திக்ராஜா வரவேற்றார்.வாழ்நாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வடக்கு கரிசல்குளம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்ததான கிளப் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஐ.பொன்னையா தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் ஜி.தங்கராஜ் முன்னிலை வகித்தார். ஜி.கார்த்திக்ராஜா வரவேற்றார்.வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டாக்டர் ஐ.சண்முகநாதன் முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கே.ராஜாகுணசீலன், ரத்த வங்கியின் மருத்துவ அதிகாரி ஒய்.கீதா, ஆர்.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் டி.சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் பி.மாரியப்பன், செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். கே.ராஜா நன்றி கூறினார்.