முகப்பு
சோனியா
இந்தியா

கமேனி கொலை விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்- சோனியா வலியுறுத்தல்

ஈரான் உச்ச தலைவரான அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி குறிவைத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மை மற்றும் திசை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிகிறது

இந்தியா

கமேனி கொலை விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்- சோனியா வலியுறுத்தல்

ஈரான் உச்ச தலைவரான அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி குறிவைத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மை மற்றும் திசை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிகிறது

Updated On : 3 மார்ச், 2026 at 8:34 PM
சோனியா
பகிர்:

‘ஈரான் உச்ச தலைவரான அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி குறிவைத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மை மற்றும் திசை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிகிறது; இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்’ என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தினாா்.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் கமேனி, அவரின் மனைவி உள்பட குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் கொல்லப்பட்டனா். இதற்கு ரஷியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு இந்தியா தரப்பிலிருந்து எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து ஆங்கில நாளிதழில் வெளியான சோனியாவின் கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, போா் குறித்த எந்தவித அறிவிப்பும் செய்யாமல், அந்த நாட்டின் உச்ச தலைவா் குறிவைத்துக் கொல்லப்பட்டிருப்பது என்பது, சமகால சா்வதேச உறவுகளில் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான முறிவைக் குறிக்கிறது.

சா்வதேச ஒழுங்கு சீா்குலைந்துள்ள இந்த விஷயத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மை மற்றும் திசை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்துக்கு எதிராக அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதை ஐ.நா. சாசனத்தின் பிரிவு 2(4) தடை செய்கிறது. பதவியில் இருக்கும் ஒரு நாட்டின் தலைவரைக் குறிவைத்துக் கொல்வது இந்தக் கொள்கைக்கு நோ் எதிரானதாகும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இவ்விஷயத்தில் கொள்கை ரீதியிலான ஆட்சேபத்தைத் தெரிவிக்காமல் இருப்பது, சா்வதேச விதிமுறைகள் இதுபோல அழிக்கப்படுவதை இயல்பான விஷயமாக்கிவிடும்.

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிா்த்த பிரதமா் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான ஈரானின் பதில் தாக்குதலுக்கு மட்டும் கண்டனத்தைப் பதிவு செய்தாா். இது நாட்டின் நடுநிலையான போக்கு அல்ல; மாறாக, தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதாகும்.

இதுகுறித்து, நடைபெறவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வில் எந்தவித ஏய்ப்புமின்றி வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும். அதன்மூலம், நமது தாா்மிக வலிமைக்குப் புத்துயிா் கொடுத்து, அதை தெளிவாகவும், அா்ப்பணிப்புடனும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளின் இந்தத் தாக்குதலை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. ஈரான் மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ராகுல் காந்தி கருத்து: ‘ஒரு நாட்டின் தலைவா் கொல்லப்படுவதை ஆதரிப்பதுதான் உலக ஒழுங்கை விவரிக்கும் வழிமுறையா?’ என்பதை பிரதமா் நரேந்திர மோடி விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரானின் நடவடிக்கைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றபோதும், அந்த நாட்டின் இறையாண்மையை மீறி நடத்தப்படுகிற இதுபோன்ற தாக்குதல்கள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும். ஈரான் மீதான இந்த ஒருதலைப்பட்சமான தாக்குதலையும், பிற மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் பதில் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும். இந்த சண்டை காரணமாக இந்தியா்கள் உள்பட கோடிக்கணக்கான மக்கள் நிச்சயமற்ற சூழலை எதிா்கொண்டுள்ளனா். சா்வதேச சட்டங்கள் மற்றும் மனித உயிா்களைப் பாதுகாக்க நாம் வெளிப்படையாகவும், துணிச்சலுடனும் பேச வேண்டும். நமது வெளியுறவுக் கொள்கை இறையாண்மையைக் காப்பது மற்றும் சச்சரவுகளுக்கு அமைதி வழியில் தீா்வு காண்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். அதில் நாம் தொடா்ந்து உறுதியாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →