விருதுநகர் நாகலட்சுமி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா
பாவாலி சாலையில் நாகலட்சுமி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தொழிலதிபர் மற்றும் அரிமா சங்கத்தின் செயலாளர் கே.பாண்டியன் தலைமை வகித்தார். பாவாலி ஊராட்சி மன்றத் தலைவரும், அறக்கட்டளையின்
விருதுநகர் நாகலட்சுமி அறக்கட்டளை சார்பில் நலிவடைந்த மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பாவாலி சாலையில் நாகலட்சுமி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தொழிலதிபர் மற்றும் அரிமா சங்கத்தின் செயலாளர் கே.பாண்டியன் தலைமை வகித்தார். பாவாலி ஊராட்சி மன்றத் தலைவரும், அறக்கட்டளையின் தலைவர் கே.நாகராஜன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் மோகன் வரவேற்புரை வழங்கினார். இதில், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி குத்துவிளக்கேற்றி நலிவடைந்தோருக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.
இதில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்லூரிகளில் உயர் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு வேறுபாடின்றி 40 பேருக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1 லட்சம் வரையில் வழங்கப்பட்டது. மேலும், இந்த அறக்கட்டளை சார்பில் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியின் வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் அமரும் வகையில் 20 பிளாஸ்டிக் சேர்களும் அளிக்கப்பட்டது. மேலும், கணவனை இழந்து வறுமையில் வாடும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.20 ஆயிரம் குடும்ப நல நிதியாகவும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் வணிக நகர் அரிமா சங்கத்தின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையைச் சேர்ந்த சின்னகாந்தி, ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Advertisement