முகப்பு
விருதுநகர்

காரியாபட்டி ஒன்றியத்தில் குடிநீர் தொட்டிகள் திறப்பு

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட்டியில் புதிய சிறிய குடிநீர் தொட்டியை வியாழக்கிழமை காரியாபட்டி ஒன்றியக் குழுத் தலைவர் முத்துலெட்சுமி திறந்து வைத்தார்.

Updated On : 7 ஜூன், 2013 at 12:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:34 PM

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட்டியில் புதிய சிறிய குடிநீர் தொட்டியை வியாழக்கிழமை காரியாபட்டி ஒன்றியக் குழுத் தலைவர் முத்துலெட்சுமி திறந்து வைத்தார்.

   காரியாபட்டி ஒன்றியப் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் தலா ரூ. 1.30 லட்சம் செலவில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.    இதன் திறப்பு விழா ஒன்றிய விவசாய அணிச் செயலர் முத்துபாண்டி தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி குடிநீர் தொட்டிகளைத் திறந்து வைத்தார். அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.