விருதுநகர்

மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள அண்ணாநகர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் 26-ஆம் ஆண்டு வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது.    பொங்கல்விழா 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. 500-க்கு

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள அண்ணாநகர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் 26-ஆம் ஆண்டு வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

   பொங்கல்விழா 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு காப்பு அணிந்து விரதம் இருந்து வந்தனர். பொங்கல் விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

   சர்வ அலங்காரம் செய்யப்பட்ட மாரியம்மன் திருத்தேரில் அண்ணாநகரின் நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் சரவணன், கந்தமுரளி, ஸ்ரீ தரன் ஆகியோர் பறவை காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

   பொங்கல் விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT