விருதுநகர்

பொதுமக்கள் எதிர்ப்பால் அரசு மணல் குவாரி மூடல்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் சனிக்கிழமை அரசு மணல் குவாரி மூடப்பட்டது.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் சனிக்கிழமை அரசு மணல் குவாரி மூடப்பட்டது.

   திருச்சுழி அருகே உள்ள காரைக்குளம் கிராமத்தை சுற்றி தாமரைக்குளம், எசலிமடை, செந்நிலைக்குடி, இடையங்குளம் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் செல்லும் குண்டாற்றின் நீரை வைத்தே இப்பகுதி விவசாயிகள் பெருமளவில் விவசாயம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

   இந்நிலையில் காரைக்குளத்தில் மணல் குவாரி அமைத்து சனிக்கிழமை முதல் லாரியில் மணல் அள்ளும் பணி துவங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த இப்பகுதி விவசாயிகள்  சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மணல் குவாரியை முற்றுகையிட்டனர். திருச்சுழி காவல் ஆய்வாளர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

   காரியாபட்டி வட்டாட்சியர் முகம்மது ரவிக்கான் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் காலையில் திறக்கப்பட்ட மணல் குவாரி உடனடியாக மூடப்பட்டது.

   இதுபற்றி திங்கள்கிழமை (ஜூன் 17) மீண்டும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வட்டாட்சியர் கூறினார். மணல் குவாரி நடத்தப்பட்டால் எங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையினை வட்டாட்சியரிடம் ஒப்படைத்து விட்டு, கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என கிராம மக்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT