விருதுநகர்

விருதுநகர் அருகே அம்மா திட்ட முகாம்: வட்ட வழங்கல் அலுவலர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்   

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் வி.சொக்கலிங்காபுரம் ஊராட்சியைச் சேர்ந்த  பெத்தலுப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் அம்மா திட்ட முகாமில்   வட்ட வழங்கல் அலுவலர் நாகேஸ்வரி,

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பொதுமக்களைத் தேடி வருவாய் திட்டம் என்ற அம்மா திட்ட முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் வி.சொக்கலிங்காபுரம் ஊராட்சியைச் சேர்ந்த  பெத்தலுப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் அம்மா திட்ட முகாமில்   வட்ட வழங்கல் அலுவலர் நாகேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் பல்வேறு நலத்திட்டம் சம்பந்தமான மனுக்களை பெற்றனர். இதில், மொத்தம் 416 மனுக்கள் பெறப்பட்டு, 136 மனுக்களுக்கு  உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் அனைத்தும் பல்வேறு துறைகளுக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாமில் வி.சொக்கலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன்,  ஜமீன்சல்வார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT