முகப்பு
விருதுநகர்

மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் போலீஸார் பற்றாக்குறை

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் போலீஸார் பற்றாக்குறையால் சட்டம் ஒழுங்குப் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் போலீஸார் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

Updated On : 30 ஜூன், 2013 at 12:20 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:03 PM

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் போலீஸார் பற்றாக்குறையால் சட்டம் ஒழுங்குப் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் போலீஸார் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

 சுமார் 20 கி.மீ. சுற்றளவில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது மல்லாங்கிணர் காவல் நிலையம். இது துவங்கப்பட்டபோது 30 காவலர்கள் பணிபுரிந்து  வந்தனர். இங்கிருந்து மாற்றலாகிச் செல்லும் காவலர்களுக்கு பதில் புதிதாக போலீஸார் நியமனம் செய்யப்படாததால் தற்போது சார்பு ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்பட 10 போலீஸார் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.  ஆய்வாளர் அலுவலகம், துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், மதுரை நீதிமன்றம், விருதுநகர் நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் என தினமும் 5 போலீஸார் வெளியில் சென்று விடுவதால், மீதமுள்ள 5 போலீஸார்தான் காவல் நிலையத்தில் உள்ளனர்.

 இதனால், கிராமங்களில் நடக்கும் பொங்கல், திருவிழா, அரசியல் கட்சிக்  கூட்டங்களுக்கு போலீஸாரால் போதிய பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. ஆகவே இந்த காவல் நிலையத்துக்கு போதுமான காவலர்களை நியமிக்க மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.