தொற்றுநோய் கட்டுபாட்டு முகாம்
பந்தல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ராமநாயக்கன்பட்டி, சிதம்பராபுரம், பெரியநாயகிபுரம் ஆகிய கிராமங்களில், தொற்றுநோய் கட்டுபாட்டு முகாம் நடந்தது.
பந்தல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ராமநாயக்கன்பட்டி, சிதம்பராபுரம், பெரியநாயகிபுரம் ஆகிய கிராமங்களில், தொற்றுநோய் கட்டுபாட்டு முகாம் நடந்தது.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன் அறிவுரைபடி, மருத்துவ அலுவலர் சக்திவேல், பூச்சியியல் வல்லுநர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், சுகாதாரமான குடிநீர் விநியோகம் குறித்து அறிவுறுத்தி மேல்நிலை தொட்டிகளில் குளோரினேசன் செய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் நடந்தது. குடிநீர் குழாய்கள் பழுது நீக்கினார்கள். டயர்கள், சிரட்டை, உரல் போன்றவைகளில் உள்ள கொசுபுழுக்களை அபேட் மருந்து மூலம் அழித்தனர். மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு, நலக்கல்வி பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது.